பசிதான் உணர்வைப் புரட்டும்__நீ
பயணப் படவே மிரட்டும்
வசிக்க விடாமல் விரட்டும்__உன்
வளங்கள் குவிய திரட்டும்
அறிவுப் பசியின் உணவு__நீ
அதிகம் படித்தால் நிறைவு
வறியோர்ப் பசியை உணரு__உன்
வசதிப் பெருகும் தினமும்
மிருகம் பசியால் துடிக்கும்_ அது
மிரளும் எதையும் கடிக்கும்
அருகில் இருந்தால் துரத்தும்__அது
அளவிலாப் பசியை உணர்த்தும்
ஆக்கம் *கவியன்பன் கலாம்*