Sunday, September 14, 2025

அப்பா… குடிப்பதை நிறுத்தவும் – கடிதம் எழுதிவிட்டு 16 வயது மகள் எடுத்த விபரீத முடிவு!

spot_imgspot_imgspot_imgspot_img

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை அடுத்த சின்னராஜாகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. கூலித்தொழிலாளியான இவருக்கு குடிப் பழக்கம் இருந்துள்ளது. இவரது மகள் விஷ்ணு பிரியா (16) குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பள்ளியில் 10ம் வகுப்பு படித்து, பொதுத்தேர்வில் 410 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.இந்நிலையில் அடிக்கடி மது அருந்திவிட்டு வரும் தந்தையால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக அவரது மகள் விஷ்ணு பிரியா மன நிம்மதியின்றி இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் விஷ்ணு பிரியா நேற்று மாலை கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அக்கடிதத்தில், “எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனது தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தி விட வேண்டும். எனது குடும்பம் எப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றதோ அப்போது தான் எனது ஆத்மா சாந்தி அடையும்” என உருக்கமாக எழுதி வைத்துள்ளார்.இது குறித்து தகவல் அறிந்த குடியாத்தம் தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல…

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் நாளை மின்தடை!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பட்டுக்கோட்டை நகர மின்வாரிய உதவி...

பட்டுக்கோட்டையில் நாளை மின்தடை!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பட்டுக்கோட்டை நகர மின்வாரிய உதவி...

நெல்லை, காயல்பட்டினத்து மக்களுக்கு உதவிடுங்கள் – முஸ்லீம் லீக் நகர செயலாளர்...

காயல்பட்டினத்தில் கொட்டி தீர்க்கும் கன மழையினால் அங்கிருக்கும் பொதுமக்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகி வருகிறார்கள். கடந்த 24மணி நேரத்தில் மட்டும் 960 மி.மீ...
spot_imgspot_imgspot_imgspot_img