Sunday, February 1, 2026

மக்களின் கொந்தளிப்பை தூண்டாதீர்! அதிரை மின்சார வாரியத்துக்கு முஸ்லீம் லீக் எச்சரிக்கை!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் சமீபகாலமாக இரவுநேரத்தில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுகிறது. இதனால் இரவுநேர தூக்கத்தை தொலைக்கும் அதிரை மக்கள், கோடைக்காலத்தில் நிம்மதியின்றி பரிதவிக்கும் சூழல் உள்ளது.

இந்நிலையில் அடிக்கடி மின் தடை ஏற்படுத்தி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி போராட தூண்ட வேண்டாம் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் அதிரை நகர செயலாளர் வழக்கறிஞர் Z.முகம்மது தம்பி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் அவர், தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே அதிரை நகரில் நிகழும் அறிவிக்கப்படாத மின் தடை, மின்சார வாரிய அலுவலக தொலைப்பேசி எண்ணை மக்கள் தொடர்புக்கொண்டால் அதை ஏற்க மறுப்பது உள்ளிட்டவை மூலம் சிறப்பான ஆட்சிக்கு அதிகாரிகள் சிலர் களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் மின்சார வாரிய உயர் அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக பிரச்சனைக்கான தீர்வை காண்பதுடன் தவறிழைக்கும் பணியாளர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் முகம்மது தம்பி வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் அலட்சியமாக இருந்துவிட வேண்டாம் என சுட்டிக் காட்டும் அவர், அதிரை மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கி போராட தூண்ட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img