Saturday, September 13, 2025

விமான கட்டண நிர்ணயத்தை மிஞ்சும்  தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளை !

spot_imgspot_imgspot_imgspot_img

விழாக்காலம், விடுமுறை நாட்கள் என கட்டண கொள்ளையில்  கட்டுப்பாடே இல்லாமல் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது என்கிறார்கள பேருந்து பயணிகள்.

கண்காணிப்பிற்கு என்றே தனி டீம் அமைத்தாலும் டீல் பேசியது போல எதுவுமே கண்டுகொள்ளாத அதிகாரிகளின் தயவில்தான் இந்த கட்டண கொள்ளையே நடப்பதாக பகிர் கிளப்புகிறார் பட்டுக்கோட்டை பண்ணையார் ஒருவர் !

கடந்த ஆட்சியிலாவது இது போன்ற கட்டண உயர்வுகள் இல்லை என்றும், அவ்வப்போது தட்டி கேட்கும் அதிகாரிகளால் அடங்கி போனார்கள் என்றே கூறப்படுகிறது….

எது எப்படியோ, அதிராம்பட்டினம் நகரத்திற்கு வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ்களில் தற்போது வெகுவாக பயணிகள் குறைந்தே காணப்படுவதாக ஆம்னி பஸ்களின் முதலாளிகள் கவலை தெரிவிக்கிறார்கள்…

இருப்பினும் கட்டண கொள்ளையடித்த ஆம்னி பஸ் ஆசாமிகள், ஏஜெண்டுகளிடம் வர்ரத வாங்கி போடு என்றளவிற்கு இறங்கி போயுள்ளதாக மன்னடி முகவர் ஒருவர் தெரிவிக்கிறார்.

இந்த நிலைக்கு ஆம்னி பேருந்து முதலாளிகள் தள்ளப்பட்டு இருப்பதற்கு காரணம்,நமது பகுதியில் இருந்து வாரம் நான்குமுறை ரயில் போக்குவரத்து தொடங்கியதே காரணம் எனலாம்,இருப்பினும் அதிக பயணிகளை கொண்ட அதிராம்பட்டினத்தில் இருந்து வாரம் ஒருமுறைதான் சென்று வருகிறதா.

இந்த வாரந்திர ரயிலுக்கு பதிலாக தினசரி இரவு நேர ரயில்.இயக்கினால் ஆம்னி பேருந்துகளின் தேவை இருக்காது என அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் கூறுகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img