அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல் முகம்மது நினைவு 23ம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி கடந்த 12/06/2023 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.
இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டான் போஸ்கோ மதுரை அணியினரும் கேமரூன் FC புதுக்கோட்டை அணியினரும் மோதினர். ஆட்டத்தின் ஆரம்பம் முதலே தாக்குதலை தொடங்கிய கண்டனூர் அணி, முதல் பாதியில் 1 கோல் அடித்தது. துடிப்பான வீரர்களுடன் களமிறங்கிய இரு அணிகளும் கோல் அடிக்க பெரிதும் முயற்சி செய்தனர். முதல் பாதியில் கேமரூன் FC அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.
பின்னர் விறுவிறுப்பாக நடைபெற்ற இரண்டாம் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனையடுத்து முழு ஆட்டநேர முடிவில், கேமரூன் FC புதுக்கோட்டை அணி, 1-0 என்ற கோல் கணக்கில் டான் போஸ்கோ மதுரை அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
நாளைய தினம்(03/07/2023) விளையாட வேண்டிய அணிகள் :
வெஸ்டர்ன் FC அதிரை vs செயின்ட் ஜோசப் திருச்சி
இடம் : கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானம்