Saturday, September 13, 2025

கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) ஒருகிணைந்து நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம்…!!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டத்தில் தொடர்ச்சியாக அவசர இரத்த தேவைகளுக்கு இரத்த தான கொடையாளர்களை ஒருங்கிணைத்து இரத்த தான சேவையை சிறப்பாக செய்து வரும் கிரசெண்ட் பிளட் டோனர்ஸ் அமைப்பை பற்றி அனைவரும் அறிவோம்..

தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாளுக்கு நாள் இரத்த தேவைகள் அதிகரித்துக் கொண்டே இருப்பதை அனைவரும் அறிந்ததே, அதே போல் அதிக அளவில் டெங்கு காய்ச்சல் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு இரத்த தேவைகளை கருத்தில் கொண்டு CBD அமைப்பு, பிரில்லியண்ட் CBSC பள்ளி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை கிளை மற்றும் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் நாளை(07/10/2023) சனிக்கிழமை புதுக்கோட்டை உள்ளூர் பிரில்லியண்ட் CBSC பள்ளியில் நடைபெறுகிறது.

இந்த முகாம் சரியாக காலை 10மணிக்கு துவங்கும் எனவும் அறிவித்துள்ளனர்.

தங்களுடைய வேலை சுமையின் காரணமாக இரத்த தானம் செய்ய முடியாதோர் மற்றும் இரத்த தான செய்ய விருப்பமுள்ள தன்னார்வலர்கள் கலந்துகொண்டு இந்த முகாமை சிறப்பிக்குமாறு CBD தஞ்சை மாவட்டம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இரத்த தானம் செய்ய விரும்புவோர் மற்றும் அவசர இரத்த தேவைக்கு…

கிரசெண்ட் பிளட் டோனர்ஸ்,
தஞ்சை மாவட்டம்.
8883184888, 9500392301 ,9791418704, 8508191619.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img