Sunday, May 19, 2024

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினம் – அதிரையில் நாளை ஐமுமுக நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம்!

Share post:

Date:

- Advertisement -

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6, ஆண்டுதோறும் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் சார்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும், பாபர் மசூதியை இடித்த சங்பரிவார கும்பலை கண்டித்தும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நாளை டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினம் பாசிச எதிர்ப்பு நாளாக கருதப்பட்டு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன.

தஞ்சை தெற்கு மாவட்ட ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நாளை(டிசம்பர் 6) பாசிச எதிர்ப்பு நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

சிறுபான்மை இன மக்களின் வழிபாட்டு தலங்களை, வரலாற்று சின்னங்களை மற்றும் தியாக வரலாற்றினை அழிக்க நினைக்கும் பாசிச சிந்தனையாளர்களுக்கு எதிராக அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மாலை 4.30 மணியளவில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஐமுமுக-வின் தலைமைக்கழக பேச்சாளர்கள் திருச்சி ஜாகிர் மற்றும் ஷேக் உமர் ஆகியோர் கண்டன உரையாற்ற உள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என தஞ்சா தெற்கு மாவட்ட ஐமுமுக-வினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...