Wednesday, March 18, 2026

அதிரையில் TNTJ நடத்திய இரத்ததான முகாம்!

spot_imgspot_imgspot_imgspot_img

நாட்டின் 75ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை கிளைகள் சார்பில் நேற்று (18/01/2024) காலை 10 மணிமுதல் 2.30 மணிவரை, அதிரை கிளை-1 தவ்ஹீத் பள்ளிவாசலில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

இம்முகாமிற்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ராஜிக் முகம்மது தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலை வகித்தார். இம்முகாமை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மாவட்ட குருதி பரிமாற்று அலுவலர் Dr. கிஷோர் மற்றும் இரத்த வங்கி ஆலோசகர் கண்ணன் ஆகியோர் மருத்துவ குழுவுடன் இணைந்து நடத்தி கொடுத்தனர்.

மேலும் இம்முகாமில் கலந்துகொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று, உடல் தகுதி அடிப்படையில் 83 யூனிட் இரத்தம் தானமாக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு TNTJ அதிரை கிளைகள் சார்பாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை கிளை-1 நிர்வாகிகள் நசுருதீன், யாசர் அரபாத், இப்ராமூசா, சாகுல் ஹமீது, ஜாஃபர் சாதிக், முகமது ஜலால், முகமது இக்பால்,தவ்ஃபீக் உமர், ஹபீப் ரஹ்மான், அதிரை கிளை-2 நிர்வாகிகள் ஃபஜால் முகைதீன்,
அஹமது ஜலீல் அபூபக்கர், ஜமால் முகம்மது, ஃபைஸல் முகம்மது ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img