அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் உள்ள தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர் பல்வேறு நற்காரியங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் 2024ம் ஆண்டு செயல்படுத்தப்பட இருக்கும் ஒன்றான திட்டங்களில் ஒன்றான பழமைவாய்ந்த வாழைக்குளத்தை ஆழப்படுத்தி அகலப்படுத்தி தூர்வாரும் பணிகள் கடந்த வாரம் கடைமடைப்பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம்(KAIFA) அமைப்பின் உதவியோடு தொடங்கி நடைபெற்று வந்தது.
அதிரை கடற்கரைத்தெரு முஹல்லா நிர்வாகத்தின் அனுமதியுடன் கடந்த ஏழு நாட்களாக வாழைக்குளம் தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், குளத்தின் ஆழம் அதிகரிக்கப்பட்டு, அகலமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் நேற்றுடன் பணிகள் முடிவுபெற்ற நிலையில், குளத்தில் தண்ணீரும் நிரப்பப்பட்டு வாழைகுளமானது சிறப்பாக காட்சியளிக்கிறது. தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்துடன் அதிரை லயன்ஸ் சங்கம், KAIFA அமைப்பு மற்றும் MILKY MIST ஆகியவை இணைந்து இந்த குளத்தை தூர்வாரியுள்ளனர். மேலும் இந்த வாழைக்குளம் தூர்வாரும் பணிகளுக்கான செலவினங்கள் முழுவதும் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தால் செய்யப்பட்டுள்ளது.
இந்த வாழைக்குளம் தூர்வாரும் பணிக்கு பரிந்துரை செய்த அதிரை லயன்ஸ் சங்கத்திற்கும், உறுதுணையாக இருந்து ஜேசிபி ஹிட்டாச்சி இயந்திரம் வழங்கி உதவிய KAIFA அமைப்பிற்கும், MILKY MIST நிறுவனத்திற்கும் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
தூர்வாருவதற்கு முன் :




தூர்வாரியதற்கு பின் :

















