Saturday, September 13, 2025

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன் என்கிற முகநூல் சமூக ஆர்வரலர்கள், பத்திரிக்கையாளர்கள், தொண்டு அமைப்புகள், அரசியல் பிரமுகர்கள் என பலரையும் குற்றவாளிகளாக சித்தரித்து போலியான முகநூல் தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அதே போன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் நகர செயலாளர் வழக்கறிஞர் முஹம்மது தம்பி, பத்திரிக்கையாளர்கள் நூருல் இப்னு ஜஹபர் அலி, ஹசன், சமூக ஆர்வலர் ஜியாவுதீன் உள்ளிட்டவர்களை தவறாக சித்தரித்து முக நூலில் உலவ விட்டிருந்தனர்.

இதுகுறித்து வழக்கறிஞர் Z.முகம்மது தம்பி, நூருல் இப்னு ஜஹ்பர் அலி, ஹசன் ஆகியோர் தனித்தனியே சைபர் குற்ற புலனாய்வு மையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்த நிலையில் துரித நடவடிக்கையில் இறங்கிய சைபர் கிரைம் சம்பந்தப்பட்ட தமிழ் நேசன் முகனூல் பதிவை நீக்கியதோடு, குற்றவாளி யார்?

பின்னனி என்ன? என்கிற வகையில் விசாரனை மேற்கொண்டு வருவதாகவும் சமூகத்தில் தேவையற்ற குழப்பங்களை ஆதரமற்ற முறையில் பதிவிடுவது குற்றம் எனவும் அத்தைகையோர் மீது பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளதாக மனு தாரர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இக் குற்றச்செயலில் ஈடுபட்ட நபரை சைபர் கிரைம் போலிசார் நெருங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img