அதிராம்பட்டினத்தில் வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 13ம் ஆண்டு மாநில அளவிலான எழுவர் கால்பந்து தொடர் போட்டி நேற்று தொடங்கியது.
அதிராம்பட்டினம் மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கிய இத்தொடரில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் மன்னை FC மன்னை அணியினரும் AFC ஆலத்தூர் அணியினரும் மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய மன்னை FC மன்னை அணி, 3-1 என்ற கோல் கணக்கில் AFC ஆலத்தூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
நாளைய(20/07/2024) தினம் விளையாட வேண்டிய அணிகள் :
தம்பி மெமோரியல் காரைக்குடி vs யாதவா காலேஜ் மதுரை
இடம் : பெரிய மருதநாயகம் மைதானம், மேலத்தெரு, அதிராம்பட்டினம்



