அதிராம்பட்டினம் மஸ்ஜித் சேவைக்குழு (MSK) ,ஷிஃபா மருத்துவமனை,தி ஐ ஃபவுண்டேஷன் இணைந்து இன்று காலை 9 மணி முதல் மாலை வரை மதரசத்துர் ராசீத்(மிஷ்கீன் பள்ளி)யில் நடைபெற்றது.
இம்முகாம் மிஷ்கீன் பள்ளி தலைவர் அப்துல் ஹமீது ஹாஜியார்,AJ பள்ளியின் தலைவர் அமீன் ஹாஜியார் மற்றும் அனைத்து ஜமாத்தார்கள் முன்னிலையில் தொடங்கியது.
இம்முகாமில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர், இதில் 70 நபர்களுக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது தவிர சிறிய குறைப்பாடு உள்ளவர்களுக்கு தி ஐ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் இலவச ஆலோசனை மற்றும் மருத்துவம் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக தாய் ட்ரஸ்ட் இளைஞர்கள் ராஜாமடம் அருகேயுள்ள ராமகிருஷ்ண சாரதா ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் இருந்து 8 நபர்களை அழைத்து வந்து கண் சிகிச்சை மேற்கொண்டனர்.











