அதிராம்பட்டினம் நகரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் தெரு நாய்களால் பொதுமக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
கூட்டம் கூட்டமாக நகரில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பள்ளி செல்லும் சின்னஞ்சிறு பிள்ளைகள் அச்சத்துடனேயே கடக்க நேரிடுகிறது.
பன்னாட்டு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் நாய்கள் வதை கூடாதென்ற காரணத்தை காட்டி அதிகாரிகள் தட்டி கழிப்பது ஏற்புடையது அல்ல.
மேலும் அதிராம்பட்டினம் நகராட்சி எல்லைக்குள், அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தும் நாய்களை பிடித்து விட்டு செல்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதிராம்பட்டினம் SDPI கட்சி நகர நிர்வாகம் சார்பில் நகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது, அதில் அதிகரித்து வரும் நாய்களால் வாகன ஓட்டிகள், மற்றும் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவதாக அதில் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே அதிகாரிகள் போர்கால அடிப்படையில் நகரில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து ப்ளு கிராஸ் எனும் அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.







