அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட 2வது வார்டில் அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்ததாக தெரியவில்லை. குறிப்பாக இஜாபா பள்ளி லைனில் சிறிய மழை பெய்தாலே நச நசவென்று காணப்படும் இப்பகுதியில் சாலை வசதி வேண்டி பல முறை நகராட்சியிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் பலனில்லை என்கின்றனர்.
மேலும் A.கிரேடு பகுதி என்பதால் வரி வசூலும் பிரமாதமாக இருக்கும் ஆனால் இப்பகுதிக்கு அடிப்படை தேவை என்றால் மட்டும் செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் உள்ளது என இஜாபா லைன் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சமீப காலமாமாக பெய்து வரும் மழையினால் சேறும் சகதியுமாக மாறிப்போன மணற்சாலையை தார் சாலையாக மாற்றித்தர 2வது வார்டு கவுன்சிலரும் தொடர் கோரிக்கையை வைத்தாலும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை.
இதனால் சளைத்து போன தன்னார்வலர்கள் ஒன்றினைந்து பள்ளம் படுகுழியான இஜாபா பள்ளி சாலையை செப்பனிட முன் வந்துள்ளனர். அதன்படி இன்று களத்தில் இறங்கிய அவர்கள் முதற்கட்டமாக வெட்மிக்ஸ் கொட்டி JCB மூலம் சமன் படுத்தி வருகிறார்கள். தேவைப்படும் பட்சத்தில் தார்சாலை அமைக்கவும் தயாராக உள்ளதாக அந்த தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
வரியை மட்டும் வாரி சுருட்டும் நகராட்சிக்கு மக்களுக்கு மக்கள் பணி செய்யமட்டும் கசப்பாக உள்ளதா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும் காழ்புணர்ச்சியோடு செயல்படும் தலைவர் மற்றும் துணைத் தலைவர் மீது கட்சியின் தலைமைக்கு எத்தனை புகார்கள் பறந்தாலும் கண்டு கொள்ளாத திமுக தலைமை 2026ஐ நினைவில் கொள்ள வேண்டும் என உண்மை உபிக்கள் அறிவாலயத்திற்கு அறிவுறுத்தி வருகிறார்கள்.








