அதிரையில் ஒவ்வொரு வருடமும் இஸ்லாமிய ஹிஜ்ரி மாதமான துல்கஃதா மாத இறுதில் புஹாரி ஷரீஃப் ஆரம்பித்து தொடர்ந்து 40 நாட்கள் புஹாரி ஹதீஸ்களை ஓதி அதற்குரிய சொற்பொழிவுகளை எடுத்துக் கூறி ஊர் ஒற்றுமை, உலக நன்மை மற்றும் புதுப்புது கொடிய நோய்களிலிருந்து பாதுகாப்பு வேண்டியும் சிறப்பு பிரார்த்தனைகள் செய்வது வழக்கம்.
அது போல இவ்வருடத்திற்கான புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் நாளை 28.05.2025 புதன்கிழமை காலை காலை 6 மணிக்கு திக்ர் மஜ்லிஸ் துவங்கி, புஹாரி ஷரீஃப் ஓதப்பட்டு பின்னர் 7.40 மணிக்கு அதிரை ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரியின் முதல்வர் K.T.முஹம்மது குட்டி ஆலிம் அவர்கள் தலைமையில், ஒவ்வொரு நாளும் உலமாக்கள் பலர் மார்க்க சொற்பொழிவாற்ற உள்ளனர்.
90 வருடத்திற்கும் முன்னதாக, அதிரையில் ‘காலரா’ எனும் பெரும் நோயால் அதிரையர்கள் அவதிப்பட்டு நாளுக்கு நாள் உயிர் பலி ஆகி கொண்டிருந்த இக்கட்டான சூழலில், மர்ஹூம் ஷைகுனா ஆலிம் அவர்களின் வழிகாட்டலில், உலமாக்களின் ஆலோசனையின் படி அதிரையில் தொடர்ந்து 40 நாட்கள் திக்ர் மற்றும் அதனைத் தொடர்ந்து புஹாரி ஷரீஃப் ஓதுவது என தீர்மானிக்கப்பட்டு தொடர்ந்து ஓதப்பட்டு வந்ததன் விளைவாக, இப்போது இந்த தலைமுறை வரை அதிரையில் காலரா என்கிற நோய் எட்டிப்பார்க்கவில்லை என்பது வரலாறாக இருப்பது குறிப்பிடத்தக்கது.