அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும் வீரர்கள் பல அணிகளில் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர்.
இத்தொடரின் 20வது போட்டியில் இன்று தன்னுடைய இரண்டாவது நாக் – அவுட் சுற்று போட்டியில் அதிரை AFFA அணி பெரியப்பட்டினத்தை சந்தித்தது.
இப்போட்டியில் வெற்றி பெற்றால் காலிறுத்திக்கு சென்றுவிடலாம் என்கிற முனைப்புடன் களமிறங்கிய AFFA அணி வீரர்களின் வேகத்திற்கு, சற்றும் ஈடு கொடுக்க முடியாமல் பெரியப்படினம் அணி திணறியது.
முதல் பகுதி நேர ஆட்ட முடிவில் AFFA அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில், அதிரை AFFA அணி வீரர்களின் கால்கள் ஓய்வின்றி பேசிக் கொண்டே இருந்ததன் விளைவாக அடுத்தடுத்து இரு கோல்களை அடித்து பெரியப்பட்டினம் அணியின் ஸ்கோரை பேசவே விடாமல் 3 – 0 என்கிற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இரண்டு லீக் சுற்று போட்டிகளில் வெற்றி பெற்ற AFFA அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.