அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு நிகழ்ச்சி இன்று 21/08/2025 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
அதிரை கடற்கரைத்தெரு ஜூமுஆ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கடற்கரைத்தெரு ஜமாஅத் தலைவர் P.G.T. முஹம்மது இஸ்மாயீல் தலைமை தாங்கினார். 22வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் P.G.T. செய்யது முஹம்மது, சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜமாஅத் பொருளாளர் M. நஸ்ருதீன் சாலிஹ் மற்றும் சமூக ஆர்வலர் O.K.M. சிபகத்துல்லாஹ் ஆகியோர் விளையாட்டின் அவசியம் குறித்து வீரர்கள் மத்தியில் சிற்றுரை ஆற்றினர். விளையாட்டு ஆர்வலரும், துப்பாக்கிச் சுடுதல் வீரருமான வஜீர் அலி, வீரர்கள் மத்தியில் விளையாட்டு தொடர்பான கேள்விகளை கேட்டு, சரியாக பதில்களை அளித்த 3 விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி ரொக்கப்பரிசு வழங்கினார்.
இந்நிகழ்வில் கடற்கரைத்தெரு கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து அணிகளின் வீரர்கள் மற்றும் அதிரையில் உள்ள பல்வேறு அணிகளைச் சேர்ந்த வீரர்கள் என சுமார் 50 வீரர்களுக்கு விளையாட்டில் அவர்களின் பங்களிப்பை பாராட்டி கேடயங்கள் வழங்கப்பட்டன. மேலும் விளையாட்டு ஆர்வலர் வஜீர் அலிக்கு கடற்கரைத்தெரு ABCC கிரிக்கெட் அணி சார்பில், சிறப்பு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பல்வேறு அணிகளின் விளையாட்டு வீரர்கள், ஆர்வலர்கள், இளைஞர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


















