Thursday, December 11, 2025

Indigo விமானத்தின் தரமற்ற சேவை : குமுறும் அதிரை பயணிகள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

இந்தியாவின் முன்னணி குறைந்த கட்டண விமான சேவைகளில் பெரிதும் பெயர் போன Air India பயணிகளில் அதிருப்திக்கும் அவ்வப்போது அசம்பாவிதங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்வது வாடிக்கையாக இருந்த நிலையில், மற்றொரு நிறுவனமான Indigo இப்போது இவ்விஷயத்தில் AirIndiaவிற்கு நிகராக தனது விமானத்தின் தரமற்ற சேவைகளை செய்து வருவது பயணிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

சவுதி அரேபியா தம்மாமிலிருந்து ஒரு மாத விடுமுறைக்காக நேற்று முன்தினம் ஹைதராபாத் வழியாக சென்னைக்கு பயணித்த அதிரையரும், Indigo விமான சேவையால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

தம்மாமிலிருந்து ஹைதராபாத் சென்ற விமானம், மீண்டும் சென்னைக்கு செல்லவிருந்த நிலையில், எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி விமானம் காலதாமதமாக செல்லும் என அறிவிப்பு வந்தது. இதனால் பல மணிநேரம் பயணிகள் காத்திருந்தனர். இதனிடையே மீண்டும் விமான நிறுவனத்திடமிருந்து வந்த மற்றொரு அறிவிப்பில், சென்னை மற்றும் பல்வேறு நகரங்களுக்கு செல்லவிருக்கும் Indigo விமானம் ரத்து செய்யப்படுவதாக வந்த அறிவிப்பை அறிந்த பயணிகள் சம்பந்தப்பட்ட விமான நிறுவத்தின் அதிகாரிகளிடம் முறையிட்டதற்கு, அலட்சியத்துடன் பொறுப்பற்ற பதிலையே தெரிவித்துள்ளனர்.

மேலும், விமானம் ரத்து குறித்தான கட்டணத்தை பயணிகள் திருப்பித் தர கோரி கேட்டதற்கு மழுப்பலான பதிலையும், அவர்களுக்கான எந்த ஒரு இழப்பீடு வசதியையும் சம்பந்தபட்ட Indigo விமான நிறுவனம் செய்து கொடுக்க முன் வரவில்லை. இதனால் பல பயணிகள் வேறு வழியின்றி தங்களது சொந்த செலவிலேயே மற்றொரு விமானத்தில் தொலைதூர பயணம் செல்ல வேண்டிய அவல சூழலும் ஏற்பட்டுள்ளது.

எதிர்பாராத அசாதரான குடும்ப சூழல், மருத்துவ அவசரம் போன்ற இன்னும் பல்வேறு காரணங்களுக்கு விரைவாக செல்வதற்கு தான் விமானத்தை பயன்படுத்தி வரும் சூழலில், இது போன்ற தரமற்ற விமான சேவையை இண்டிகோ போன்ற இதர விமான நிறுவனங்கள் வழங்குவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல என அதில் பயணித்த அதிரையர் மன வருத்தத்தோடு தெரிவித்தார்.

சமீப மாதங்களாகவே தொடர்ச்சியாக ஏற்பட்ட தாமதங்கள், குறைந்த தரமான வாடிக்கையாளர் சேவை மற்றும் சரியான தகவல் பரிமாற்றம் இல்லாதது போன்ற காரணங்களால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதுபோன்ற தொடர் தரமற்ற சேவைகளை விமான நிறுவனங்கள் வழங்கும் பட்சத்தில் கணிசமான வாடிக்கையாளர்களை அவர்கள் முற்றாக இழக்க நேரிடும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை..

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம்...

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...
spot_imgspot_imgspot_imgspot_img