மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்ததால் நேருக்கு நேர் மோதி உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்தது.
இந்த விபத்தில் இருவரும் ஹெல்மெட் அணியாததால் தலையில் காயமடைந்து இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது போன்ற விபத்துக்கள் தமிழ்நாட்டில் தினசரி நிகழ்கின்றன. கடந்த ஆண்டு மட்டும் 15,000-க்கும் மேற்பட்ட சாலை விபத்தில் 6,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
விழிப்புணர்வு குறிப்பு:எப்போதும் ஹெல்மெட் அணியுங்கள் – இது உயிர் காக்கும் கவசம்! அதிவேகம் தவிருங்கள் – வேகம் உயிரை பறிக்கும்!








