ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
மீனவர்கள் நீண்டகால கோரிக்கை
மீனவர்கள் நீண்ட காலமாக மீன் பிடி மதகுகள், மீன் வலைகள் உலர்த்தும் இடம், ஏலக்கூடம், மீன்பிடி கால்வாய்கள் தூர்வாரல் மற்றும் படகுகள் நிறுத்தும் வசதிகள் கோரி வந்தனர்.
மீன்வளத்துறை சார்பில் இத்திட்டம் தொடங்கப்பட்டு, மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.முக்கிய
பிரமுகர்கள் பங்கேற்பு
பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாத்துரை, திமுக மாவட்ட செயலாளர் பழனிவேல், திமுக மாநில வர்த்தக அணியின் செயலாளர் பழஞ்சூர் செல்வம், அதிராம்பட்டினம் நகர்மன்ற தலைவர் தாஹிரா அப்துல் கறீம், துணைத்தலைவர் இராம குணசேகரன்,திமுக மேற்கு நகர செயளாலர் SH.அஸ்லம், திமுக ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், அதிராம்பட்டினம் நகர வார்டு உறுப்பினர்கள், மொய்தீன் பிச்சை கனி,பசூல்கான்,சுஐபுதீன், ஏரிபுறக்கரை கிராம பஞ்சாயத்து தலைவர்கள், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் விழாவில் கலந்துகொண்டனர். இத்திட்டத்தால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளனர்.













