Thursday, December 18, 2025

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  கடிதம்.

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டது.

தேர்தல் வரும்போது எல்லாம், தாலுகா கனவை சொல்லி வாக்கு சேகரிக்கும் திமுக அரசு இம்முறையாவது அதிராம்பட்டினம் தாலுகா அறிவிப்பை வெளியிட வேண்டும் என பொதுமக்களின் எதிர்பார்ப்பை தமிழக அரசுக்கு முஸ்லீம் லீக் சுட்டிக்காட்ட விரும்புகிறது என அக்கடிதத்தில் குறிப்பிடபட்டு உள்ளன.

பேரூராட்சியிலிருந்து நகராட்சியாக மாறியதை அடுத்து, வரிகள் உயர்த்தப்பட்டு மக்கள் செலுத்தி வருகிறார்கள் என்றும்,  ஆனால் அரசு அலுவல் பணிகளுக்கு பட்டுக்கோட்டைக்கே செல்லும் நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளன. பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலகத்தில் அதிக எண்ணிக்கையிலான கிராமங்களை உள்ளடக்கி தாலுகா அலுவலகம் செயல்படுவதால், கோப்புகள்,தஸ்தாவேஜுகள் நிரம்பி காணப்படுகின்றன இதனால் காலதாமதம் நேரவிரயம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் காட்டுகின்றனர்.

ஏரிபுறக்கரை,ராஜாமடம்,மல்லிப்பட்டினம்,இரண்டாம்புலிக்காடு,மழவேனிற்காடு,மகிழங்கோட்டை,புதுக்கீட்டை உள்ளூர் உள்ளிட்ட கிராமங்களை இணைத்து  அதிராம்பட்டினத்தில் தாலுகா அலுவலகம் வருவாகும் பட்சத்தில் பட்டுக்கோட்டை தாலுக்காவின் பணிச்சுமைகள் குறைவதோடு,கால விரயம் குறைய வாய்ப்புகள் உருவாகும் எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறப்பு அறிவிப்பு வெளியிட்டு புதிய தாலுகா பணியை துவக்கி வைக்க அன்போடு கேட்டு கொள்வதாக அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் , முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...
spot_imgspot_imgspot_imgspot_img