Thursday, February 26, 2026

அதிரை பண்பலை 90.4 FM-ன் 10ஆம் ஆண்டு துவக்க விழா: நேயர்கள் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற்றது.

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம், டிசம்பர் 27: அதிரை பண்பலை 90.4 FM-ன் 10ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் நேயர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, இமாம் ஷாஃபி பள்ளிக்கூட வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.பண்பலையின் நிர்வாக இயக்குநர் ஹாஜி MS. தாஜூதீன் அவர்கள்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், “வாசிப்பு திறனும் கேட்கும் திறனும் மேலோங்கினால் சமூக தீமைகள் விலகும். இதன் காரணமாகவே அதிராம்பட்டினத்தில் ஒரு பள்ளிக்கூட நிர்வாகமே இந்த சமூக பண்பலையை நடத்தி வருகிறது” என்றார்.

மேலும், இந்த பண்பலை மூலம் மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கும் அனைத்து திட்டங்கள், வானிலை நிலவரம், விவசாயம் உள்ளிட்ட தகவல்கள் 15 கி.மீ. வரையிலான பரப்பளவில் ஒளிபரப்பு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் அதிராம்பட்டினம் சுற்றுவட்டார பண்பலை நேயர்கள் ஆண்கள் பெண்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டு, தங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கினர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரமலான் தொடக்கத்தை முன்னிட்டு மாதாந்திர மின் பராமரிப்பு பணியை தள்ளிவைக்க கோரிக்கை.

ரமலான் மாதம் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டிருந்த மாதாந்திர மின் பராமரிப்பு பணியை மாற்றி...

நன்றி உறவுகளே…

திரும்பி பார்க்கிறோம்… கடந்து வந்த பாதை எவ்வளவுகரடு முரடானது என்று…எத்தனை வலிகள், வேதனைகள் சொல்லி முடிக்க முடியாதது…அத்தோடு முடிந்துவிடவில்லை தொடர் மிரட்டல்கள், அதட்டல்கள் –...

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம்...

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல்...
spot_imgspot_imgspot_imgspot_img