அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் – அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை.
அதிராம்பட்டினம், ஜன. 7: பொங்கல் தொகுப்பு பெறுபவர்கள் நிதானமாக இருக்க வேண்டும் எனவும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு பரிசுத்தொகை உள்ளதால் நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அதிராம்பட்டினம் ஐவா ஃபவுண்டேஷன் கோரிக்கை விடுத்துள்ளது.
இதோடு, நியாய விலைக்கடைகளில் தலா ஒரு பெண் காவலரை நியமித்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என நகர காவல்துறை ஆய்வாளருக்கு கடிதம் எழுதியதாக அவ்வமைப்பினர் தெரிவித்துள்ளனர்.








