Sunday, February 1, 2026

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும் பங்கேற்பு

spot_imgspot_imgspot_imgspot_img

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது.


சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாத்துரை தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர் சா. முரசொலி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.


பாரம்பரியத்தை போற்றும் வகையில் மண்பானையில் பொங்கலிட்டு, கும்மிப்பாட்டுடன் “பொங்கலோ பொங்கல்” என முழக்கமிட்டபடி விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.  இந்த நிகழ்வில் அதிராம்பட்டினம் திமுக மேற்கு நகர செயலாளர் அஸ்லம் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.


மக்கள் ஒற்றுமை, சமத்துவம் மற்றும் பண்பாட்டை வலியுறுத்தும் விதமாக நடைபெற்ற இந்த பொங்கல் விழா, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img