செய்திகள்

திராவிட இஸ்லாமிய கழக வேட்பாளராக அதிரை நிசார் அகமது ராயபுரத்தில் களம்!
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை ராயபுரம் தொகுதியில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. இத்தொகுதியில், திராவிட இஸ்லாமிய கழகத்தின் சார்பில் அதிரை மண்ணின் மைந்தர் நிசார் அகமது போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக...

பட்டுக்கோட்டை அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்க்கும் அதிரை கவுன்சிலர் கணவர் – மாவட்ட செயலாளரின் முடிவு என்ன?.
பட்டுக்கோட்டை | ஏப்ரல் 07, 2026திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கா. அண்ணாத்துரைக்கு எதிராக, கட்சியின் மூத்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே போர்க்கொடி தூக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிராம்பட்டினம் நகராட்சியின் 11-வது வார்டு திமுக...

அதிராம்பட்டினத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: குடும்ப வாட்ஸ் ஆப் குழுக்களை பரப்புரைக்கு பயன்படுத்த வேண்டுமென IUML ஹசன் வலியுறுத்தல்.
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினத்தில், திமுக மேற்கு கழகத்தின் சார்பில் தனியார் அரங்கில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் திரளாக கலந்து...

அதிராம்பட்டினத்தில் மின்னல் தாக்கி மீனவர் உயிரிழப்பு – கிராமமே சோகம்.
அதிராம்பட்டினம் அருகே மின்னல் தாக்கியதில் 65 வயது மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அதிராம்பட்டினம் ஏரிபுறக்கரை கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து (65) இன்று காலை வழக்கம்போல் கடலுக்கு மீன் பிடிக்க...
அதிரையர்களை அலறவிட்ட 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்! மாணவர்களின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?
கொரோனா காலத்தில் வீட்டிற்குள் அடைப்பட்டிருந்த தங்களது குழந்தைகளை அமைதிபடுத்த பெற்றோர்கையில் எடுத்த ஸ்மார்ட் ஃபோன் எனும் ஆயுதம் மாணவர்களின் செயல் திறனிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சனியனே! என்ன நிம்மதியா தூங்கவிடு!! இந்த போனை எடுத்துக்கிட்டு தொல என்று கொரோனா லாக் டவுனில் பெற்றோர் செய்த செயல் நாளடைவில் அந்த குழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கமாகவே மாறிவிட்டது. எதை பார்க்கிறோம் எதற்கு பார்க்கிறோம் என்று கூட தெரியாமல் ரீல்ஸ்களை ஸ்கோர்ல் செய்யும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதெல்லாம் தான் நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் எதிரொலித்திருக்கிறது. அதிரையை பொறுத்தவரை மாணவிகள் 97.5% தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். ஆனால் மாணவர்கள் வெறும் 80% மட்டுமே தேர்ச்சிக்கான எல்லையை தாண்டி உள்ளனர். இதில் பலர் ஜெஸ்ட் பாஸ்.
தேர்வுகளோ, மதிப்பெண்களோ எந்த ஒரு மாணவனின் எதிர்காலத்தையும் தீர்மானிக்காது என்பதில் மாற்றுகருத்தில்லை. அதேசமயம் ஸ்மார்ட் ஃபோன் வலைக்குள் சிக்கி தேர்ச்சியை தள்ளிபோடும் மாணவர்களின் எதிர்காலம் குறித்து பெற்றோரும் ஆசிரியர்களும் சிந்தித்தே ஆக வேண்டும்.
10ம் வகுப்பு தேர்வு முடிவு: காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி 94.5% தேர்ச்சி!!
அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் கடந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 129 மாணவிகள் எழுதினர். இதில் 94.5% மாணவிகள் தேர்ச்சி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவதுதேர்வு எழுதிய 129 பேரில் 122 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முன்னதாக பன்னிரெண்டாம் வகுப்புபொதுத்தேர்வில் இந்த பள்ளி 100% தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
+2 தேர்வில் அதிரையின் சராசரி தேர்ச்சியை கூட தொடாத மாணவர்கள்! 99.3% தேர்ச்சி பெற்று...
தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதன்படி அதிரையில் உள்ள கல்வி நிறுவனங்களின்சராசரி தேர்ச்சி விகிதம் 95.5%மாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 99.3% ஆகும். ஆனால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 92% மட்டுமே. இது அதிரையின் சராசரி தேர்ச்சி விகிதமான95.5சதவீதத்தை விட 3.5% குறைவாகும். மேலும் மாணவர்களை விட 7.3% மாணவிகள் அதிகம் தேர்ச்சிபெற்று இந்தமுறையும் மாஸ் காட்டியுள்ளனர். அதேசமயம் அதிரையில் பன்னிரெண்டாம் வகுப்புக்கு பிறகு70%க்கும் அதிகமான மாணவிகள் உயர் கல்வியை தொடர முடியாத சூழல் நிலவுவது குறிப்பிடத்தக்கது.
98% தேர்ச்சி!! 10ம் வகுப்பு தேர்வு முடிவிலும் ஸ்கோர் செய்த அதிரை அரசு பள்ளி!
அதிரை அரசினர் மகளிர் மேல்நிலையில் கடந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 123 மாணவிகள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், 98% தேர்ச்சியை இந்த அரசு பள்ளி பெற்றுள்ளது. கொரொனா பேரிடர் காலத்திலும் மாணவிகளுக்கு தேவையான பயிற்சியை அரசு பள்ளி ஆசிரியர்கள்முறையாக அளித்ததாலேயே இந்த தேர்ச்சி சாத்தியமானதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். முன்னதாகபன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 99% தேர்ச்சியை இதே அரசு பள்ளி பெற்றது குறிப்பிடத்தக்கது.
காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி: 10ம் வகுப்பில் 61% மாணவர்கள்தேர்ச்சி!
அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் சமீபத்தில் நடந்து முடிந்த 10ம் வகுப்புபொதுத்தேர்வை 194 பேர் எழுதினர். இதில் 61% பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். கொரோனா ஊரடங்குக்கு பிறகுகுறுகிய கால அவகாசத்தில் நடைபெற்ற பொதுத்தேர்வு என்பதால் தங்களால் உரிய பயிற்சிகளை மேற்கொள்ளமுடியவில்லை என தேர்ச்சி வாய்ப்பு தள்ளிபோயிருக்கும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். எதுவாகினும்அடுத்தடுத்த தேர்வுகளை விரைவாக எழுதி தேர்ச்சி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கை தங்களுக்குஇருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
Big breaking: +2 தேர்வில் 100% தேர்ச்சி! அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி...
அதிரையர்களுக்கு கல்வி அறிவை வழங்குவதில் MKN மதரஸா டிரஸ்ட் தவிர்க்க முடியாத பங்களிப்பை அளித்துவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்தடிரஸ்ட்டின் கீழ் இயங்க கூடிய காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளியிலிருந்து 96 மாணவிகள் தேர்வுஎழுதியிருந்தனர். இதில் அத்தனை பேருமே தேர்ச்சி பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். மாணவிகளை 100% தேர்ச்சிபெற செய்த தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்கள், பள்ளிபணியாளர்கள் ஆகியோருக்கு பெற்றோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.








