திருவண்ணாமலை: தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வு கடந்த 2012 முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதில் எழுத்து தேர்வுக்கு 75 மதிப்பெண்ணும், செய்முறை தேர்வுக்கு 25 மதிப்பெண்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு வரும் மார்ச் 16 முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வை வரும் 20ம் தேதி முதல் 28ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதனால் செய்முறை தேர்வு நடத்துவதற்கான பணிகளில் கல்வித்துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்
More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...
அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...





