64
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ஒரு வார காலத்திற்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இப்பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இதனை தொடர்ந்து, நேற்று (18/03/2018) ஞாயிற்றுக்கிழமை அதிரை ECR சாலையில் நாம் தமிழர் கட்சியின் அடுத்தக்கட்ட முயற்சியாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இம்முகாமிர்க்கு, அதிரையை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி எ.ஜே.ஜியாவுதீன் அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் 100க்கும் மேற்பட்டோர் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்து கொண்டனர்.