தமிழகத்தில் ரயில் டிக்கெட்டுகளில் தமிழ் இடம்பெறவில்லை என்ற குறை இருந்துவந்த நிலையில், ரயில் டிக்கெட்டுகள் தமிழிலும் அச்சிடப்பட்டுள்ளன. முதலில், சென்னை சென்ரல்,திருச்சி, சேலம், மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே இது அமலுக்கு வந்துள்ளது. விரையில் மற்ற ரயில் நிலையங்களிலும் தமிழ் மொழியில் அச்சடிக்கப்பட்ட டிக்கெட் கிடைக்கும் எனவும் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.கேரளாவில், திருவனந்தபுரம்,எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய 4 ரயில் நிலையங்களில் மலையாள மொழியிலும் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் பியூஸ் கோயல் கூறியுள்ளார்.ஏற்கனவே கர்நாடகா மாநிலத்தில் கன்னட மொழியிலும், ஆந்திராவில் தெலுங்கு மொழியிலும் ரயில் டிக்கெட்டுகள் அச்சிட்டு வழங்கப்படுகிறது
More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...
அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...





