சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று (25.04.2018) புதன்கிழமை காலை இடியுடன் கூடிய மழை பெய்துள்ளதாக ஜிதவிலிருந்து நண்பர் தகவல்கள் தெரிவித்தனர்.
சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் இன்று காலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
சவூதி அரேபியாவில் பொதுவாகவே ஏப்ரல் மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாவே நிலவி இருக்கும்.அச்சமயத்தில் திடிரென்று வானிலை மாற்றம் ஏற்ப்பட்டது.இந்த காரணத்தினால் சவூதி தலைநகர் ரியாத்தில் இன்று காலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்துவருகின்றது.
மழையின் காரணத்தால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சவூதியைப் போன்று குவைத் நாடுகளிலும் 23/04/18 அன்று புழுதி காற்று வீசி மழை பொழிந்துள்ளதாக அந்தந்த நாடுகளில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.