அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை மாவட்டம் உட்பட டெல்டா மாவட்டங்களில் 2000 க்கும் அதிகமான துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது தமிழன் அழிப்பிற்கான முதல் அறிகுறி என்று திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் அங்கு உள்ள பகுதிகளில் மக்கள் பல வருடங்களாக இதற்கு எதிராக போராடி வருகிறார்கள். தற்போது மக்கள் போராட்டங்களை முடக்க மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறது.
இதனால் டெல்டா மாவட்டங்களில் 2000 க்கும் அதிகமான துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். முக்கியமாக போராட்டம் அதிகம் நடக்கும் திருவாரூர், மன்னார்குடி பகுதியில் அதிக ராணுவத்தினர் உள்ளனர்.
இது பற்றி பேஸ்புக்கில் கருத்து தெரிவித்து இருக்கும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ”தமிழின அழிப்பிற்கான முதல் அறிகுறியாக காவிரி டெல்டாவில் துணை ராணுவம் இறக்கப்பட்டிருக்கிறது.
எச்சரிக்கை கொள் தமிழா!” என்றுள்ளார்.
மத்திய அரசு மீத்தேன் திட்டத்தை உடனடியாக டெல்டாவில் நடைமுறைப்படுத்த இருப்பதாக தகவலைகளை வெளியாகி உள்ள சமயத்தில்., திருமுருகன் காந்தியின் இந்த கருத்து இன்னும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.