Home » CBD அமைப்பின் மாபெரும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு..!

CBD அமைப்பின் மாபெரும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு..!

0 comment

தஞ்சை மாவட்டம் முழுவதும் கிரசென்ட் பிளட் டோனர்ஸ் தன்னார்வல அமைப்பு இரத்த தானம், சாலை ஓரம் இறந்து கிடக்கும் ஆதரவற்றவர்களின் உடல்களை அடக்கம் செய்தல், பேரிடர் மீட்பு குழு மற்றும் ஆபத்தான சமயத்தில் மக்களுக்கு உதவுதல் போன்ற சேவைகளை செய்துவருகின்றனர்.

இந்த அமைப்பின் சார்பில் பல தன்னார்வலர்கள் மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இரத்த தானம், விபதில்லா தேசம் உருவாக்குதல், சுற்றுசூழல் பாதுகாப்பு போன்ற பல்வேறு தலைப்பில் மாபெரும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி அதிரை அருகே உள்ள மதுக்கூர் பகுதியில் வருகின்ற (13/05/2018) மாலை சுமார் 4:00மணிமுதல் துவங்கி நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சி மதுக்கூர் பூங்குடி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்ற,

முனைவர்.K.செய்யது அகமது கபீர்(தமிழ்த்துறை பேராசிரியர், காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் CBD அமைப்பின் தஞ்சை மாவட்ட தலைவர்) அவர்களும்,

DR.C.சிவசுப்ரமணியம்(துணை தலைவர், சுற்றுசூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை, தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்)அவர்களும்,

மதுக்கூர் காவல் ஆய்வாளர் A.ஆனந்ததாண்டவம் அவர்களும்,

அதிரை N.காலீத் அகமது(CBD மாவட்ட செயலர் மற்றும் நிறுவனர், உறவுகள் அறக்கட்டளை) அவர்களும்,

சேலம்.M.S.குர்ஷீத் ஹுசைன்(சமூக ஆர்வலர் மற்றும் CBDன் மாநில குருதி ஒருங்கிணைப்பாளர்) அவர்களும்,

N. கபார் அன்சாரி (முன்னாள் தாளாளர், அர்-ரஹ்மான் மழலையர் & தொடக்கப்பள்ளி, மதுக்கூர் மற்றும் சமூக ஆர்வலர்) அவர்களும் கலந்துகொண்டு

இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட இளைஞர்கள் , பொதுமக்கள் , தன்னார்வல தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி CBD மதுக்கூர் கிளை சார்பில் கேட்டுக்கொள்கிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter