94
அதிரையில் உள்ள 90 சதவீத வங்கி பயன்பாட்டாளர்களை தன்னகத்தே வாடிக்கையாளர்களாக வைத்துள்ளது கனரா வங்கி.
மேலும் அந்நிய செலாவணியை அளப்பரிய அளவில் அள்ளி கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி நிர்வாகம் கிள்ளி கொடுக்க கூட மனமில்லை.
அதிரையில் கனரா வங்கியின் ATM இயந்திரம் பழுதடைந்து சுமார் ஒன்றரை மாதங்கள் ஆகியும் கண்டு கொள்ளவில்லை.
இது குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டால் பதில் இல்லை.
இதனால் கொதிப்படைந்த வாடிக்கையாளர்கள் வங்கி மேலாளரிடம் வங்கியில் பேட்டரி வாங்கி போட வசதியில்லை என்றால் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் இருந்து பிச்சை போடுகிறோம் எடுத்துக்கொண்டு முதலில் ATM மெஷினை சரி செய்யுங்கள் என வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டதால் வங்கியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.