Friday, March 20, 2026

நீட் தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியீடு- சிபிஎஸ்இ !!

spot_imgspot_imgspot_imgspot_img

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நீட் தேர்வு முடிவுகள் ஒருநாளுக்கு முன்பாக இன்று வெளியிடப்படும் என சிபிஎஸ்இ தகவல் கூறியதாக மனிதவள மேம்பாட்டுத்துறை செயலர் அனில் ஸ்வரூப் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

தற்போது அதை உறுதி செய்து, இன்று மதியம் 2 மணிக்கு மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், இயற்கை மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு கடந்த 6ம் தேதி நடைபெற்றது. இந்தியளவில் நடைபெற்ற இந்த தேர்வில் தமிழகத்தில் 1.07 லட்சம் மாணவர்கள் உட்பட, நாடு முழுவதும் 13 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதியுள்ளனர்.

இந்நிலையில், ஜுன் 5ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருநாளுக்கு முன்னதாக தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இன்றே வெளியிடுகிறது. முன்னதாக இந்த தகவலை மனிதவள மேம்பாட்டு துறை செயலர் அனில் ஸ்வரூப் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.cbseneet.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்துக்கொள்ளலாம் என சிபிஎஸ்இ தகவல் கூறியுள்ளது. திட்டமிட்ட நாளுக்கு முன்பாக நீட் தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை.

சமீபத்தில் வெளியான 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் நேரம் குறிப்பிடப்படாமல் தான் வெளியானது. அதேபோல 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னரே சிபிஎஸ்இ வெளியிட்டது. இதன்மூலம் சிபிஎஸ்இ திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்பாக தேர்வு முடிவுகளை வெளியிட்டு, துரிதமாக செயல்பட்டு வருவது

தெரியவந்துள்ளது.

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் சீக்கரமே வெளிவருவது மாணவ சேர்கைக்கான வழிகளை எளிமையாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல மருத்துவத்துறை படிப்பிற்கான மாணவ சேர்க்கை தொடங்கிய பிறகு தான், பொறியியல், சித்த மருத்துவம் போன்ற

படிப்புகளுக்கான மாணவ சேர்க்கை நடைமுறைகளும் தொடங்கும்.
இதனால் அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னரே நீட் தேர்வு முடிவுகள் வெளிவருவது நடப்பாண்டு தொழில்துறை படிப்பிற்கான மாணவர் சேர்கையை விரைவாக முடிக்க வழிவகுக்கும் என கருத்து  தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மருத்துவ படிப்பிற்கான மாணவ சேர்கைக்கான விண்ணப்ப தேதி தொடர்பான அறிவிப்புகள் நாளை வெளியாகும் எனவும், இம்மாத 4வது வாரத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img