65
தோப்புத்துறை யூனைடெட் பேட்மின்டன் கழகம் ஒருங்கிணைத்த மாநிலம் தழுவிய மாபெரும் ஆடவர் இரட்டையர் மின்னொளி இறகுப்பந்து போட்டி கடந்த சனிக்கிழமை படேசாஹிப் விளையாட்டு அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட அணி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இந்த போட்டியின் துவக்க நிகழ்ச்சி மற்றும் பரிசளிக்கும் நிகழ்வில் தோப்புத்துறை ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.
போட்டியில் பரிசு பெற்றவர்கள் விவரம் :
முதல் பரிசு : ₹15,000
சரவணன் & கந்தவேல் , நாகை
இரண்டாமிடம் : ₹12,000
கலை & தர்மேந்திரன் , குடந்தை
மூன்றாமிடம் : ₹9,000
துரை & ஜீவா , மதுரை
நான்காமிடம் :₹ 6,000
யாசர் & அமான் , தோப்புத்துறை.