Friday, March 20, 2026

அதிரையில் அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ! குடிநீரை விலைகொடுத்து வாங்கும் அவலம் !!

spot_imgspot_imgspot_imgspot_img

 

அதிராம்பட்டினம் பேரூரில் சுமார் 75 முதல் 80ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர்.

இவர்கள் முறையாக பேரூராட்சி விதிகளுக்கு உட்பட்டு வரி செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே அதிரை மக்கள் தொகைக்கு ஏற்றவாறு குடி நீர் வினியோகம் செய்ய பேரூராட்சியில் போதுமான ஆழ்துளை கிணறுகள் இருந்தும் நிலத்தடி நீர் குறைவாக உள்ளதால் நீரேற்றம் செய்வதில் கால தாமதம் மற்றும் பற்றாக்குறை நிகழ்கிறது.

இதனால் அத்தியாவசிய குடிநீர் தேவைக்கு தனியார் நிறுவன நீர்களை வாங்கி பருகும் அவல நிலைக்கு அதிரை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மறுபுறம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பெறப்பட்ட நீரும் அங்குள்ள நீர் இருப்பு காரணமாக குறையத ்தொடங்கியதை அடுத்து இனி வரும் காலங்களில் குடிநீர் தேவை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

எனவே பொதுமக்களாகி நாம் செய்ய வேண்டியது என்ன?

குடிநீர் தேவைக்காக மட்டுமே தண்ணீரை உபயோகம் செய்யவும்.

இதர தேவைகளை வீட்டில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமே நிவர்த்தி செய்து மற்றவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டுகிறோம்.

மேலும் வீட்டில் உள்ள கழுநீர் வீட்டிலேயே பள்ளம் அமைத்து மறு சுழற்சிக்கு வாய்ப்பு அளிப்புபோம். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன் நீர்தட்டுபாடின்றி நிம்மதியாகவும் வாழலாம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img