தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று (01.07.2018) ஞாயிற்றுக்கிழமை அதிரை w s c நடத்திய கைப்பந்துத்தொடர் போட்டியில் ‘பாண்டிச்சேரி போலீஸ்’ அணியினர் முதல் பரிசை தட்டிச்சென்றனர். இரண்டாம் பரிசை ‘கொங்கு ஈரோடு அணியினர்’ தட்டிச்சென்றனர். மூன்றாம் பரிசை ‘கீரமங்களம் அணியினரும்’. நான்காம் பரிசை ‘திருச்சி ஜே.எம்.சி கல்லூரி அணியினரும்’ தட்டிச்சென்றனர்.
இதில் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் திரு. சங்கர் அவர்களும், அமிரக TIYA தலைவர் என்.எம்.எஸ் சேக் பரித் அவர்களும், தாயக TIYA தலைவர் சஃபிர் அகமது அவர்களும், முன்னால் ஓட்டப்பந்தய விரர் ஜபருல்லா அவர்களும், மற்றும் ஜமாலுதீன் அவர்களும் இப்போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசு வழங்கினர்…