Sunday, February 1, 2026

அதிரையில் புறக்கணிக்கப்படும் பிலால் நகர் பகுதி!!

spot_imgspot_imgspot_imgspot_img

ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட அதிரை பிலால் நகர் பகுதி பல வருடங்களாக சாக்கடை கழிவுகளாலும், குப்பை கூலங்கள் சாலையில் சிதறிக் கிடப்பதாலும் மிக எளிதில் அங்கு வசிப்பவர்களுக்கு நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அது மட்டுமின்றி 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையினால் பிலால் நகர் காலணி பகுதியில் உள்ள கால்வாயில் கழிவு நீர் முறையாக செல்லாமல் அப்பகுதி மக்கள் பயன்படுத்தும் வீதிகளிலும்,வீடு வாசல்களிலும் தேங்கி தூர்நாற்றம் வீசுகிறது.

இதனால் அப்பகுதி வழியே பள்ளி,கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் கழிவு நீரை கடந்து செல்வதற்கு மிகவும் துயரப்படுகின்றனர்.

இது குறித்து பல முறை ஏரிபுறக்கரை ஊராட்சி அலுவலர் திருமதி கலா அவர்களிடம் பொது மக்கள் சீரான கால்வாய் அமைத்து கழிவு நீர் வீதிகளில் தேங்காமல் இருப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று எடுத்துக் கூறிய போதிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செவிடன் காதில் ஊதிய சங்கு போல, அதற்குறிய எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர்.

அதிரையில், அதிகாரிகளால் தொடர்ந்து புறக்கணிகப்பட்டு வரும் பிலால் நகருக்கு விடிவு எப்போது தான் பிறக்குமோ என்று அப்பகுதி மக்கள் மிகுந்த ஏக்கத்துடன் உள்ளனர்.

இப்பகுதி மக்களின் ஏக்கத்திற்கு அதிகாரிகள் தீர்வை கொடுப்பார்களா அல்லது கை கட்டி வேடிக்கை பார்பார்களா என்பதை நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img