Wednesday, February 4, 2026

ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த உடனே, சுத்தப்படுத்திய வழக்கறிஞர்கள்…!

spot_imgspot_imgspot_imgspot_img

உத்திரபிரதேசம் மாநிலம் மீரட்டில் தலித் வகுப்பை சேர்ந்த வழக்கறிஞர்கள் மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன் உள்ள அம்பேத்கர் சிலையை பால் மற்றும் கங்கை நீரால் சுத்தம் செய்தனர். பாஜக மூத்த பிரமுகர் சுனில் பென்சால் அந்த அம்பேத்கார் சிலைக்கு மாலையணிவித்ததால் அம்பேத்கரின் புனிதம் கெட்டுவிட்டது என அதற்கான காரணத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இதுபற்றி மேலும் அந்த வழக்கறிஞர்கள் கூறும்பொழுது, ஆர்.எஸ்.எஸ் என்றுமே அம்பேத்கருடன்  சேர்ந்து செயல்ப்பட்டதில்லை. அவருக்காக எதுவும் செய்ததில்லை ஆனால் அம்பேத்கர் தீண்டாமையை எதிர்த்து போராடியவர். ஆனால் தற்போது அவரின் பெயரை கூறிக்கொண்டு தலித் வகுப்பினரின் வாக்கை பெற நாடகமாடுகிறது பாஜக. பாஜக என்றுமே தலித் சமூகத்தை வெறுக்கிற அரசு  என பகிரங்கமாக குற்றம்சாட்டினர்.

இதேபோல் அண்மையில் பாஜக பெண் எம்.எல்.ஏ மனிஷா அனுராகி உத்திரபிரதேசம் மாநிலம் ஹமிப்பூரில் உள்ள ஒரு கோவிலுக்குள் நுழைந்ததால் கோவில் புனிதம் கெட்டுவிட்டது என்று அப்பகுதி மக்கள்  அந்த கோவிலின் கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img