Home » அதிரை எக்ஸ்பிரஸ்-ன் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.!!

அதிரை எக்ஸ்பிரஸ்-ன் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.!!

by admin
0 comment

1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 14 ம் தேதி இரவு உலகமே உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில், அடுத்த நாள் ஆகஸ்ட் 15 ம் நாள் இந்தியா சுதந்திரத்தையும் புது வாழ்வையும் பெற்று புதிய சகாப்தம் துவக்கியது வரலாற்றில் மிகவும் அரிதான தருணம்.

நீண்ட காலம் அடைபட்டுக் கிடந்த ஒரு நாட்டின் மறுமலர்ச்சி புத்துயிர் பெற்றது என்றால் அது மிகையல்ல.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்கவும், நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லவும், மக்களின் சேவைக்காவும், மனித நேயத்திற்காகவும் அர்ப்பணித்து அயராது உழைக்கும் சக்தியை சுதந்திர தினம் ஒவ்வொரு வருடமும் வழங்குகிறது.

அவ் வகையில் நம் நாடு சுந்தந்திரம் பெற்று இன்றோடு 72 வருடங்கள் உருண்டோடி விட்ட நிலையில், நாம் சாதித்தது கடுகளவு, சாதிக்க வேண்டியது கடலளவு.. என்பதை ஆழமாக மனதில் பதிய வைத்து முன்னேற்றத்திற்காக பாடுபடுவோம்.

இது நமது ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ இணையத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நம் இந்திய பாரதத்திற்கும் தான் என்பதை விளங்கிச் செயல்படுவோம்.

வெள்ளையர்களிடம் இருந்து பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம் என்று கூறி அனைவருக்கும் ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ இணையத்தின் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter