தஞ்சாவூர் மாவட்டம்,ராஜாமடம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் வழங்கப்படும் உணவுகள் தரமற்றது என்றும், தரமற்ற உணவிற்கு அதிக செலவழிப்பதாக கூறி கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற மாணவர் அமைப்பு பல்வேறு இடங்களில் நோட்டீஸ் ஒட்டினர்.
இந்நிலையில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸை கிழித்த ராஜாமடம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பணிபுரியும் இருவர் கிழிப்பதை கையும்,களவுமாகவும் மாணவ அமைப்பின் நிர்வாகிகள் பிடித்தனர்.இதனிடைய சம்பவ இடத்திற்கு வருகை தந்த கேம்பஸ் ஃப்ரண்ட் அமைப்பின் மாநில செயலாளர் ரியாஸ் அவர்களை பிடித்து விசாரிக்கையில் கல்லூரி நிர்வாகம் அனுப்பியதன் பேரில் தான் கிழித்தோம் என்பதை ஒத்துகொண்டனர்.
அதனடிப்படையில் கல்லூரி நிர்வாகத்தை அழைத்து பேசினர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க மாணவ அமைப்பின் நிர்வாகிகள் செல்லும்போது கல்லூரி நிர்வாகிகளுக்கும்,மாணவ அமைப்பினரிடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து திரும்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து கேம்பஸ் ஃப்ரண்ட் மாநில செயலாளர் ரியாஸ் அகமது பேட்டியளிக்கையில், கல்லூரி நிர்வாகம் தவறுக்கு வருத்தம் தெரிவித்ததாகவும்,உடனே மாணவர்களுக்கு தரமான உணவு வழங்குவதாகவும்,இதனை மாணவர்களுக்கு தெளிவுப்படுத்துவதாகவும் கூறியதன் அடிப்படையில் தற்காலிகமாக அறிவிப்பை நிறுத்தி வைத்துக் கொள்கிறோம் என்று கூறினார்.