Home » மல்லிப்பட்டினத்தில் ராஜிவ்காந்தி பஞ்சாயத்ராஜ் சங்க கூட்டம்!!

மல்லிப்பட்டினத்தில் ராஜிவ்காந்தி பஞ்சாயத்ராஜ் சங்க கூட்டம்!!

by admin
0 comment

ராஜிவ்காந்தி பஞ்சாயத் சங்கம் சார்பாக தஞ்சாவூர் மண்டல கூட்டம் மல்லிப்பட்டினம் மனோராவில் நேற்று(செப் 7) மாலை 4 மணியளவில் நடைபெற்றது .

கூட்டத்திற்கு வட்டார ஒருங்கிணைப்பாளர் A.நூருல் அமீன் தலைமை தாங்கினார். கிராம சபா கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்களின் வலிமையையும், தீர்மான நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்படுத்தினார்கள்.

இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ராஜிவ் காந்தி பஞ்சாயத் சங்கத்தின் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளரும்,ராகுல் காந்தியின் மேற்பார்வையாளருமான கீதா கிருஷ்ணன்,மண்டல ஒருங்கிணைப்பாளர் நாச்சிக்குளம் தாஹிர்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரேவதி சாக்கிலோ,ஞானத்திடல் நாகூரான்,பேராவூரணி பஷீர், வடுகநாதன்,மல்லிப்பட்டினம் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் KMM.அப்துல் ஜப்பார்
ஆகியோர் கலந்துகொண்டனர்,சுந்தர்ராஜ் நன்றிவுரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

முன்னதாக மல்லிப்பட்டினம் கடைத்தெருவில் அமைந்துள்ள கட்சியின் கொடியை கீதா கிருஷ்ணன் ஏற்றி வைத்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter