Thursday, February 5, 2026

அதிரை வந்த விநாயகர் : இந்துக்கள் மகிழ்ச்சி!!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி இந்துக்களால் வெகு விமரிசையாக கொண்டாடபட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக அதிரையில் இன்று விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தப்பட்டது.

இதில் அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிள்ளையார் (விநாயகர் சிலைகள்) ஒவ்வொன்றாக எடுத்து வரபட்டு அதிரையில் உள்ள வண்டிப்பேட்டையில் விநாயகர் சிலைகள் ஒன்றன்பின் ஒன்றாக மொத்தம் 39 விநாயகர் சிலைகள் சங்கமித்தது.

இதனைத் தொடர்ந்து இவ் ஊர்வலம் அதிரை வண்டிப்பேட்டையிலிருந்து முக்கிய சாலைகள் (சேர்மன்வாடி, பேரூந்து நிலையம், கிழக்கு கடற்கரைச் சாலை) வழியாக எடுத்துச் செல்லப்பட்டு கடற்கரையில் கரைக்கப்பட்டது.

பாதுகாப்பு பணிக்காக நாகை மாவட்டத்தில் இருந்து 100 காவலர்களும், தஞ்சை மாவட்டத்தில் இருந்து 500 காவலர்களும், திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 300 காவலர்களும் கலந்து கொண்டு விழாவிற்கு எந்த ஒரு அசம்பாவிதங்களும் ஏற்படாமல் சிறப்பாக நடத்தி முடித்தது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img