67
அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதிகளில் கடும் வெயில் சுட்டெரித்த நிலையில் இன்று அதிகாலையில் இடி,மின்னலுடன் மழை பெய்தது.
கடந்த சிலநாட்களாக காலை நேரங்களில் இருந்தே கடுமையான வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது.இந்நிலையில் இன்று அதிகாலை 2:30 மணியளவில் இடி,மின்னலுடன் ஒரு மணிநேரம் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பரவலாகப் பெய்த மழையினால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மழை பெய்ய ஆரம்பித்த உடனே அதிரையில் பெரும்பாலான பகுதிகளில் மின்சார வினியோகம் இல்லை,காரணம் மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது.கடந்த சிலநாட்களுக்கு முன் தான் மின்பராமரிப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.