அதிராம்பட்டினம் அக் 05;-
தமிழக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் தமிழகத்தில் வருகின்ற 7ஆம் தேதி அன்று பலத்த மழைக்கான வாய்ப்பு உள்ளது எனவும், சிவப்பு அபாய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.இதனை அடுத்து மாநில அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் அதிராம்பட்டினத்தின் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இதனை கருத்தில் கொண்டு இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாவட்ட ஊடக பிரிவின் சார்பில் அதிராம்பட்டினம் பேரூராட்சியில் மனு அளிக்கப்பட்டன, அதில் அதிரையில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை மீட்டெடுக்க வேண்டும், மழையினால் ஏற்படும் தொற்று நோய்களில் இருந்து மக்களை காக்க வேண்டும்.என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
இந்த மனுவை மாவட்ட ஊடகப்பிரிவு பொருப்பாளர் ஷாகுல் ஹமீது முன்னிலையில் மாவட்ட பிரதிநிதி MR ஜமால் முஹம்மது, அமீரக காயிதே மில்லத் பேரவை MS முஹம்மது இகரம், பரக்கத்,அப்துல் காதர் உள்ளிட்ட முஸ்லிம் லீக் பிரமுகர்கள் கலந்துகொண்டு பேரூராட்சி பொருப்பாளர் சரவனனிடம் மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரி உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்