Saturday, March 21, 2026

மல்லிப்பட்டினத்தின் பல்வேறு இடங்களில் நோய் தொற்று உருவாகும் அபாயம்….!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் ஈசிஆர் சாலை,ஜூம்ஆ பள்ளி என பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள சாக்கடை கழிவுகளால் நோய் தொற்று பரவும் அபாயம்.

கடந்த சிலநாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது.மழையின் காரணமாக ஊராட்சியின் பல்வேறு இடங்களில் சாலைகளில் பள்ளம் ஏற்பட்டு மழைநீர் தேங்கி காணப்படுகிறது.மேலும் கடந்த சிலநாட்களுக்கு முன் ஈசிஆர் சாலைகளில் ஊராட்சி நிர்வாகத்தால் சாக்கடை கால்வாய் தூர்வாரப்பட்டு அந்த கழிவுகள் சாலையிலேயே போட்டுவிட்டு சென்றுவிட்டனர். இந்த சாக்கடை கழிவுகளை அப்புறப்படுத்தாமல் நோய் தொற்று,கொசு உற்பத்தி உருவாகும் வழியை ஊராட்சி நிர்வாகமே ஏற்படுத்தி உள்ளது.

மேலும் ஊரின் பல பகுதிகளில் தெரு விளக்குகளும் எரிவதில்லை,இதன் காரணமாக பல்வேறு இடர்பாடுகளை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர்.

இது குறித்து புதுமனைத் தெருவை சார்ந்த அப்துல் ஹமீது நம்மிடம் தெரிவிக்கையில், பல்வேறு ஊர்களில் மழைக்காலங்கள் வருவதற்கு முன்னதாகவே பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்,ஆனால் நமது ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எந்தவித முன்னேற்பாடுகளையும் செய்து தரவில்லை,மேலும் ஈசிஆர் சாலையில் கழிவுகள் கொட்டப்பட்டு அதனை அப்புறப்படுத்தாமல் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உருவாகி உள்ளது.எங்கள் பகுதிகள் முழுவதும் இரவு நேரங்களில் இருண்ட நிலையிலே காணப்படுகிறது.எந்தவித நடவடிக்கையும் ஊராட்சி நிர்வாகம் இதுவரை எடுக்கப்பட வில்லை என்று குற்றச்சாட்டினார்.

தீர்வுகிடைக்குமா என்ற மல்லிப்பட்டினம் பகுதி மக்கள் ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img