Home » அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் ![படங்கள்]

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் ![படங்கள்]

0 comment

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 61வது மாதாந்திர கூட்டம் கடந்த 09/11/2018 ரியாத்தின் அன்று நேஷனல் மியூசியம் பத்ஹா பார்க்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:-
கிராஅத் : சகோ. சாகீர் S/o மன்சூர் ( உறுப்பினர் )

முன்னிலை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : சகோ. N.அபூபக்கர் ( பொருளாளர் )

சிறப்புரை : சகோ. A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )

அறிக்கை வாசித்தல் : சகோ. ஷேக் மன்சூர் ( துணை செயலாளர் )

நன்றியுரை : சகோ. இமாம்கான் ( உறுப்பினர் )

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

1) இன்ஷா அல்லாஹ் வரும் வருடம் 2019-க்கான பென்ஷன் விஷயமாக உறுப்பினர்கள் தன்னார்வமாக பெயர்களை பதிவு செய்து இறுதியில் இந்த பொருளாதார சூழ்நிலையிலும் 25 நபர்கள் முன் வந்து பெயர்களை பதிவு செய்த நல்ல உள்ளங்களுக்கு மேலும் இறைவன் பரக்கத்து செய்து மேலும் நமதூர் ஏழைகளின் பொருளாதார உதவிகளை வளப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

2) ID விஷயமாக நினைவூட்டப்பட்டு விடுபட்ட நபர்கள் ID தலைமையக்கத்திலிருந்து பெற்று தருவதுடன் மேலும் தன் முகவரிகள் இதுவரை தராத நபர்களிடம் பெற்று அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.

3) நமதூர் சிறிய தைக்காள் (புதுத்தெரு தென்புறம்) தெருவை சேர்ந்த சகோதரர் ரஹ்மானின் மனைவியின் மருத்துவ செலவிற்காக ஒரே நாளில் ரூ50,000/- ரியாத்திலிருந்து ABM தலைமையகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த மருத்துவ உதவிக்காக பணம் தந்து உதவிய பல நல்ல உள்ளங்களுக்கு நன்றி செலுத்தப்பட்டது.

4) ABM தலைமையகம் மூலம் இன்ஷா அல்லாஹ் வரும் வருடம் முதல் ( பல்லாவரம் ) பில்டிங் விற்று பணம் வந்த பிறகு ரூ.40,000/- நபர் ஒன்றுக்கு வட்டியில்லா நகைக்கடனாக இரட்டிப்பதாக அறிவித்திருப்பதற்கு பாராட்டி நன்றி தெரிவிக்கப்பட்டது.

5) ஒவ்வொரு மாதமும் பென்ஷன் பெற்றுக் கொண்டிருக்கும் நபர்களில் மிகவும் ஏழ்மையான 5 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் மூன்று நபர்களுக்கு தையல் மிஸினும், இரண்டு நபர்களுக்கு கிரைண்டர் வழங்கி (அவர்களின் கைத்தொழிலுக்கு உதவுவது) என முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மூலம் அதற்கான தொகையை தலைமையகத்திற்கு அனுப்பி வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

6) கடந்த வெள்ளியன்று நடந்து முடிந்த கூட்டத்திற்கு ( தொடர் மழையையும் பாராது ) வந்து சிறப்பித்த அனைத்து அதிரை வாசிகளுக்கும் நன்றி தெரிவிப்பதோடு இதுபோன்று பல தெருவாசிகளும் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் பொருளாதார உதவிகளும் தந்து நல்குமாறு இக்கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

7) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் DECEMBER 14-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெறும், மேலும் இடம் பின்னர் அறிவிக்கப்படும். அதில் அதிரை வாசிகள் அனைவர்களும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter