Sunday, February 1, 2026

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த விவசாயி சிங்கப்பூரில் தற்கொலை..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டை அடுத்துள்ள திட்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கலைவானன் வயது 32 இவர் கடந்த 2 ஆண்டுகளாக சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் டெல்டா மாவட்டத்தில் ஏற்படுத்திய கஜா புயலின் கோர தாக்குதலால் தென்னை உள்ளிட்ட பல்வேறு விவசாயங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் கலைவாணனுக்கு சொந்தமாக உள்ள பல தென்னைகளும் சேதமடைந்துள்ளன. ஏற்கனவே வட்டிக்கு கடன் வாங்கி வெளிநாடு சென்ற கலைவாணன் அந்த கடனை திருப்பிக் கொடுக்கமுடியாமல் சிரமத்தில் இருந்துள்ளார்.மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயத்தையும் கண்டு இரண்டு நாட்களாக மன உளைச்சலில் இருந்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று முன்தினம் தனது அறையில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார் .அதனை தொடர்ந்து அவரது உடல் இன்று சொந்த ஊரான திட்டக்குடி கொண்டு வரப்படவுள்ளது. விவசாயி தற்கொலை சம்பவம் பட்டுக்கோட்டை பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img