39
மத்திய அரசின் திட்டங்களை விளம்பரம் செய்வதற்கு 5,275 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரதோர் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து பேசிய அவர், மத்திய அரசு துறைகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், இந்த திட்டங்களை மக்கள் அறிந்துகொள்ள அதனை விளம்பரப்படுத்தியதாகவும், அதனால் கடந்த 2014ம் ஆண்டு பிஜேபி ஆட்சிக்கு வந்தது முதல் 5 ஆயிரத்து 245 கோடியே 73 லட்சம் செலவு செய்யப்பட்டிருப்பதாக கூறினார். அதிகபட்சமாக கடந்த 2017-18ஆம் ஆண்டில் 1,313 கோடியே 57 லட்சம் செலவாகியிருப்பதாக அவர் தெரிவித்தார்.