98
பன்னாட்டு லயன்ஸ் சங்கம், துவரை அரிமா சங்கம் மற்றும் துவரை வணிகர் சங்கம் ஆகியன இணைந்து நடத்திய சிசிடிவி கேமரா திறப்பு விழா மற்றும் இலவச பல் சிகிச்சை முகாம் நேற்று 12.03.2019 வெவ்வாய்கிழமை மாலை 5 மணியளவில் துவறங்குருச்சி முக்கூட்டுச்சாலையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி. சேகர் எம்எல்ஏ கலந்துகொண்டு சிசிடிவி கேமராக்களை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் விருந்தினர்களாக பட்டுக்கோட்டை டிஎஸ்பி S. கணேசமூர்த்தி, பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வே. பாலா சுப்பிரமணியன், சப் இன்ஸ்பெக்டர் R.S. இராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.