76
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் ECR சாலையில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
17-வது நாடாளுமன்றத் தேர்தலையடுத்து, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் 24 குழுக்களாகப் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினர் சுழற்சி முறையில் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.மல்லிப்பட்டிணம் ஈசிஆர் சாலையில் இன்று (மார்ச் 18) வாகனங்களை நிறுத்த சொல்லி வாகனங்களை தீவிர சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.